Home /News /tamil-nadu /

ஜாதிக்கொரு சுடுகாடு இருப்பதுதான் திராவிட மாடலா? எல்.முருகன்

ஜாதிக்கொரு சுடுகாடு இருப்பதுதான் திராவிட மாடலா? எல்.முருகன்

எல். முருகன்

எல். முருகன்

50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா என்று எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா என்றும்  ஜாதிக்கொரு சுடுகாடு  வைத்து கொள்வது தான் திராவிட மாடலா என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையான சமூகநீதி நாயகன் பிரதமர் மோடிதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில்,  பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ராஜா என்பவரது  புதிய இல்லம் புதுமனை புகுவிழாவிற்கு, மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வேலூர் இப்ராஹிம் உட்பட பாரதீய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்பு செய்தியாளர்களை  சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா? ஜாதிக்கொரு சுடுகாடு  வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார்.

    உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான் என்று  கூறிய எல்.முருகன், காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு  பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது  மத்திய அரசு என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது, செயல்படுத்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்


    2014 க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை  மாநிலமாக உள்ளது. தமிழகத்தில்  சரியான பராமரிப்பு இல்லாமலும்,  நிர்வாக சீர்கேடு  காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது  தமிழக அரசு, அதனை மக்கள் தலையில்  சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டினார்.

    செய்தியாளர்: சரவணன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Dravidam, L Murugan, Tamilnadu government

    அடுத்த செய்தி