Home /News /tamil-nadu /

கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு சிறுவன்.. உ.பி.யில் இருந்து தனியாக ரயில் ஏறிவந்தது விசாரணையில் தகவல்..

கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு சிறுவன்.. உ.பி.யில் இருந்து தனியாக ரயில் ஏறிவந்தது விசாரணையில் தகவல்..

வெளிநாட்டு சிறுவன் மீட்பு

வெளிநாட்டு சிறுவன் மீட்பு

Kanyakumari : கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த இந்திய வாழ் வெளிநாட்டு சிறுவனை மீட்டு, உத்திரபிரதேசத்தில் வசித்து வரும் பெற்றோரை குமரி மாவட்டம் வரவழைத்த காவல்துறையினர் சிறுவனை ஒப்படைத்தனர். 

    கன்னியாகுமரியில்  2 நாட்களாக சுற்றித்திரிந்த  இந்திய வாழ் வெளிநாட்டு சிறுவன் மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் இருந்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு, சிறுவனை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார். 

    சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் காணப்படுகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு 13 வயது வெளிநாட்டு சிறுவன் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் 3 நாட்களாக தனியாக சுற்றித்திரிந்ததால், சந்தேகமடைந்த,  அப்பகுதியில் ரோந்துபணியில் இருந்த முதல்நிலை பெண்காவலர் கலைசெல்வி விசாரணை செய்தார்.

    அப்போது, அந்த சிறுவனிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை இருந்தன. மேலும், ரஷ்யா மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக  பேசியுள்ளார். பின்னர் மொழிபெயர்பாளர் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் பெயர் நீலமாதவ் (13) என்பதும் ரஷ்ய நாட்டின் அருகிலுள்ள எஸ்தோனியா நாட்டை பூர்விகமாகக் கொண்ட அவனது பெற்றோர்கள், கடந்த 10 ஆண்டுகளாக இந்து மதம் மீது கொண்ட நம்பிக்கையால் உத்தரபிரதேசத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    Read More : சுத்தம் இல்லாத கழிவறை.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்... 4 மணி நேரம் தவித்த ரயில் பயணி அபாயச் சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு

    அச்சிறுவன் மதுராவில்  ஏழாம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து கன்னியாகுமரி வந்திருக்கிறான். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார், மதுராவில்  இருந்த அவரது பெற்றோர் வாசுதேவ ஜார்வினன்-அலெக்ஸான்ட்ரா ஜார்வினன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து,  உத்திரபிரேதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் கோவர்தன் என்ற காவல்நிலையத்தில் சிறுவன் காணாமல் போனதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்ட பின், அங்கிருந்து  இரு மாநில போலீசார் உதவியுடன்  கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தனர்.

    Must Read : போலீசுடன் மல்லுக்கட்டிய போதை ஆசாமி.. வைரலாகும் வீடியோ 

    அங்கே, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், சிறுவனை பெற்றோரிடம் கோட்டார் காவல் நிலையத்தில் வைத்து ஒப்படைத்தார்.  மேலும் சிறுவனுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அறிவுரை கூறி பெற்றோருடன்  அனுப்பி வைத்தார்.இந்நிலையில், சுற்றுலா தலமான  கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்ட பெண் காவலர் கலை செல்விக்கு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பாராட்டும் தெரிவித்தார்.

    செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Boy, Kanyakumari, TN Police

    அடுத்த செய்தி