Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரான்; குமரியில் சுற்றுலா தலங்களுக்கு தடை

தமிழகத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரான்; குமரியில் சுற்றுலா தலங்களுக்கு தடை

குமரியில் சுற்றுலா தலங்களுக்கு தடை

குமரியில் சுற்றுலா தலங்களுக்கு தடை

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவலை தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய தேதிகளில்  திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

அதே போல ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை தடுக்க பத்பநாதபுரம் அரண்மனை , சர்வதேச சுற்றுலாதலமான குமரிமுனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலாபயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

Also Read : ஆரணி அருகே கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் படுக்கைகள் கண்டெடுப்பு!
Published by:Vijay R
First published:

Tags: Kannyakumari

அடுத்த செய்தி