ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

 கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

 கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கள்ளக்காதலை கண்டித்த கணவனை பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    கன்னியாகுமரியில் கள்ளக்காதலனுடன்  மனைவி உல்லாசமாக இருந்ததை தட்டிக்கேட்ட கணவனை காதலனுடன் சரமாரியாக பெண் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் தன் குடும்பத்தினருடன்  வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராஜ்குமார் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவார். இந்நிலையில் அவரது மனைவிக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். வீட்டின் உரிமையாளர் என்பதால் அவர் ராஜ்குமார் வீட்டிற்கு வந்து செல்வது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த வில்லை. இதனைப் பயன்படுத்தி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

    Also Read: மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கணவன் கைது

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமார் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இதனையடுத்து கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்த அவரது மனைவி உல்லாசமாக இருந்துள்ளார். வேலைக்கு சென்ற ராஜ்குமார் மாலை வேளையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அறையில் மனைவி வேறுஒரு நபருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ந்துள்ளார். உடனடியாக சத்தம் போட்டு இருவரையும் கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். வீட்டில் இருந்த வெட்டுக்கத்தி மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    Also Read: வாட்ஸ் அப்பில் பரவிய போட்டோ.. ஷாக்கான உதவி வேளாண்மை பெண் அலுவலர் – மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த கணவனை பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Husband Wife, Illegal affair, Illegal relationship, Kanyakumari