Home /News /tamil-nadu /

கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமை.. குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாக வீடியோ வெளியிட்ட பெண்

கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமை.. குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாக வீடியோ வெளியிட்ட பெண்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.

    கள்ள காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைபடுத்துவதால் இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாகவும்  பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த முட்டம் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 37). இவருக்கும் முட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 2002 ம் வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். பாபு கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதலி ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. லலிதா தன் இரு மகள் மற்றும் மகனுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லலிதாவின் வீட்டிற்கு வந்த பாபுவின் கள்ள காதலியின் உறவினர்கள் லலிதாவின் வீட்டை அடித்து நொறுக்கி லலிதாவையும் தாக்கி வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளனர். இதில் படுகாயமடைந்த லலிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்
    சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    Also Read: மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கணவன் கைது

    இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குளச்சல் மகளிர் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என புகார் அளித்தார். காவல்நிலையத்தில் தினம்தோறும்  காத்திருந்தும் நடவடிக்கை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான லலிதா இரு மகள்களுடன் கதறி அழுது முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்கள் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Husband Wife, Illegal affair, Illegal relationship, Kanyakumari, Tamilnadu

    அடுத்த செய்தி