Home /News /tamil-nadu /

Easter : திருநயினார்குறிச்சி தேவாலயத்தில் ஈஸ்டர் பெருவிழா கொண்டாட்டம்..!

Easter : திருநயினார்குறிச்சி தேவாலயத்தில் ஈஸ்டர் பெருவிழா கொண்டாட்டம்..!

தேவாலயத்தில், ஈஸ்டர் பெருவிழா

தேவாலயத்தில், ஈஸ்டர் பெருவிழா

Happy Easter Sunday 2022 | கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு  பாஸ்கா  திருவிழா உயிர்ப்பு  திருப்பலி   நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகையை  முன்னிட்டு கன்னியாகுமரி திருநயினார்குறிச்சியில் உள்ள தேவாலயத்தில், ஈஸ்டர் பெருவிழா சிறப்பு பிரார்த்தனையும், பின்னர் ஈஸ்டர் முட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

கிறிஸ்தவர்களில்   முக்கிய  பண்டிகையான   ஈஸ்டர்  பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு  முந்தைய 40 நாட்கள்    தவகாலமாக  கடைபிடிக்கப்பட்டது.  இதையொட்டி பாதம் கழுவுதல், சிலுவைப்பாதை  ஊர்வலம்  போன்ற  வழிபாட்டு நடைமுறைகள்   நடைபெற்றது.  தவக்காலத்தின்   முடிவு  நாள்   ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு  கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள   அனைத்து   கிறிஸ்தவ   தேவாலயங்களில் நள்ளிரவு  பாஸ்கா  திருவிழா உயிர்ப்பு  திருப்பலி   நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சி  பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில், தடைகளை  உடைத்தெறிந்து  இயேசு  உயிர்தெழுந்தார்  என்பதை  தெரிவிக்கும் வகையில்  ஈஸ்டர்  உயிர்ப்பு  பெருவிழா  வழிபாடும் அதன் பின்பு அனைவருக்கும் ஈஸ்டர் பல வண்ண மைகள் பூசப்பட்ட கோழி முட்டைகள்  வழங்கபட்டன.



முட்டையின்  ஓட்டினை  உடைத்து  கோழி குஞ்சு  வெளி வருவது போன்று சவால்களையும் தடைகளை  உடைத்தெறிந்து  இயேசு உயிர்தெழுந்தார், உண்மை  உயிர்தெழுந்தது, நீதி உயிர்தெழுந்தது , என்பதை  மெய்ப்பிக்கும் வகையிலும் மனிதர்களும் சவால்களையும் தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேற வேண்டும் என்று இந்த  முட்டைகள்  வழங்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Christianity, Kanyakumari

அடுத்த செய்தி