Home /News /tamil-nadu /

கூரியர் வேனில் குட்கா கடத்தல்... கும்பலை கூண்டோடு தட்டி தூக்கி போலீசார் அதிரடி..

கூரியர் வேனில் குட்கா கடத்தல்... கும்பலை கூண்டோடு தட்டி தூக்கி போலீசார் அதிரடி..

கூரியர் வாகனத்தில் குட்கா  கடத்தல்

கூரியர் வாகனத்தில் குட்கா  கடத்தல்

Kanniyakumari District: போலீசாரின் வாகன சோதனையில்  இருந்து தப்பிக்க போலியாக கூரியர் வாகனம் என எழுதி அந்த வாகனத்தை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டதோடு, வழியில் ஏதேனும் சோதனைகள் நடந்தால் அதனை தகவல் தெரிவிக்கும் வகையில் இரண்டு சொகுசு வாகனங்கள் பின்  தொடர்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலி கூரியர் சர்வீஸ் வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1200 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக  கூரியர்  வாகனம் உட்பட 2 சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள  வாகன சோதனைச் சாவடியில் தனிப்படை போலீசார், உதவி ஆய்வாளர் மகேஷ்வர ராஜ் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கூரியர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் மூடை மூடையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய இரண்டு சொகுசு வாகனங்களும் பிடிபட்டன.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் குட்கா  கடத்தி வந்தவர்கள் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் , ஜெஸ்வர்சிங், ரமேஷ்குமார் மற்றும் சேலத்தைச் சார்ந்த விஜயகுமார், அசோக் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள்  பெங்களூரிலிருந்து கடத்தி வருவதும், வரும் வழிகளில் பல இடங்களில் கடைகளில் இறக்கிய  பின் கன்னியாகுமரி மாவட்டத்திலும், தொடர்ந்து கேரளாவிற்கும்  கொண்டு செல்ல கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.



மேலும் போலீசாரின் வாகன சோதனையில்  இருந்து தப்பிக்க போலியாக கூரியர் வாகனம் என எழுதி அந்த வாகனத்தை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டதோடு, வழியில் ஏதேனும் சோதனைகள் நடந்தால் அதனை தகவல் தெரிவிக்கும் வகையில் இரண்டு சொகுசு வாகனங்கள் பின்  தொடர்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில்  தனிப்படை  போலீசாருக்கு கிடைத்த ரகசிய  தகவலின் பேரில்  சோதனை மேற்கொண்ட போது போலி கூரியர் வாகனமும் தொடர்ந்து வந்த இரண்டு சொகுசு வாகனங்களும் பிடிபட்டுள்ளன.



இதனையடுத்து போலீசார் கூரியர் வாகனத்தில் மூட்டைகளாக இருந்த  1200 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். கூரியர் சர்வீஸ் என எழுதி அதில் தடைசெய்யப்பட்ட குட்கா  புகையிலை மர்சல்  போன்று கட்டி கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : ஐ. சரவணன்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Gutka scam, Kanyakumari

அடுத்த செய்தி