Home /News /tamil-nadu /

சாலையை கடந்த வாலிபரின் மீது மோதிய அரசுப்பேருந்து - பதைபதைக்கும் காட்சிகள்

சாலையை கடந்த வாலிபரின் மீது மோதிய அரசுப்பேருந்து - பதைபதைக்கும் காட்சிகள்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் அரசுப்பேருந்து இளைஞர் மீது மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.

    கன்னியாகுமரியில்  அரசு பேருந்து திடீரென இயங்கியதால் சாலையை கடந்து சென்ற வாலிபரின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபரின் மேல் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தேங்காய்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நேற்று மதியம் காப்புகாடு சந்திப்பு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கிவிட்டது. ஓட்டுனர் மீண்டும் இயக்கும் போது சாலையின் மறுபுறம் நின்றிருந்த வாலிபர் ஒருவர் சாலையை மறுகடந்து பேருந்தின் முன்பக்கமாக நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக பேருந்து வாலிபரின் மீது மோதியது. இதில் வாலிபர் கீழே விழுந்து கிடந்த நிலையில் பேருந்தின் இடதுபுற முன்பக்க சக்கரம் வாலிபரின் மேல் ஏறி இறங்கி உள்ளது.

    Also Read:  ஆசைப்பட்டு போலீஸ் வேலைக்கு வந்தேன்.. வேதனையோடு போறேன் - ஆடு திருடும் கும்பலின் வைரல் ஆடியோவால் எஸ்.ஐ ராஜினாமா

    பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு பார்த்தபோது வாலிபர் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காயம் பலமாக இருந்ததினால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    Also Read:  50 ரூவா தர்ற.. கேஸ் போடட்டுமா.. லாரி ஓட்டுனரிடம் பேரம் பேசும் போலீஸார் வைரல் வீடியோ

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கடை போலீசார் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய வாலிபர் நித்திரவிளை அருகே இரையுமன்துறை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விபத்து சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

    செய்தியாளர்: சஜயகுமார் ( கன்னியாகுமரி)

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Accident, CCTV Footage, Govt Bus, Kanyakumari

    அடுத்த செய்தி