Home /News /tamil-nadu /

கேரளாவில் இன்று முழு ஊரடங்கு... தமிழக எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தம்

கேரளாவில் இன்று முழு ஊரடங்கு... தமிழக எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தம்

கேரளாவில் தமிழக வாகனங்களை கேரள போலீசார்  நிறுத்தி செல்லும் காரணங்களை கேட்டு  உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே பயணத்திற்கு  அனுமதிக்கின்றனர்.

    கேரளாவில் இன்று ஞாயிறுக்கிழமை கட்டுப்பாடுகளுடன் முழு  ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

    முழு   ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி , பால் உட்பட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம், விமான நிலையம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மருத்துவ மனைகளுக்கு செல்ல மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வசதியாக ஓரிரு கேரளா அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய (30.01.2022) விலை

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும்  அனைத்து வாகனங்களும்  தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தபட்டு, மருத்துவமனை, பால் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்கள் செல்லும்  அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    தமிழக கேரள எல்லை சோதனைசாவடியில் தமிழக போலீசார் கேரள செல்லும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்ல அறிவுரை கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க : பள்ளிகள் திறப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

    கேரளாவில் தமிழக வாகனங்களை கேரள போலீசார்  நிறுத்தி செல்லும் காரணங்களை கேட்டு  உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே பயணத்திற்கு  அனுமதிக்கின்றனர்.

    தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது. தமிழகம் ஊரடங்கு விலக்கிகொள்வதாக அறிவிக்கபட்டிருந்தாலும்  கேரள ஊரடங்கு காரணமாக இன்று தமிழக கேரள எல்லை களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    செய்தியாளர் : சஜயகுமார்

    Published by:Musthak
    First published:

    Tags: Kanniyakumari

    அடுத்த செய்தி