ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கன்னியாகுமரியில் நகைக்காக 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்துவைத்த பெண்- வீட்டை சூறையாடிய பொதுமக்கள்

கன்னியாகுமரியில் நகைக்காக 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்துவைத்த பெண்- வீட்டை சூறையாடிய பொதுமக்கள்

க்ன்னியாகுமரி

க்ன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணின் வீட்டை ஊர் மக்கள் சூரையாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட் .தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது மனைவி சகாய சில்ஜா, மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். அதனையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்து அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லையென முதல்வரால் கூற முடியுமா? - குஷ்பு சவால்

இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடிய போது பீரோவும் உடைந்தது. அதில் அந்த சிறுவன் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதைக்கண்ட அவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Published by:Karthick S
First published:

Tags: Crime News, Kanyakumari