Home /News /tamil-nadu /

ISRO Aditya-L1 | 'சூரியன் குறித்த ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 செயற்கைகோள் முடியும் தருவாயில் உள்ளது' - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

ISRO Aditya-L1 | 'சூரியன் குறித்த ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 செயற்கைகோள் முடியும் தருவாயில் உள்ளது' - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

ISRO Aditya-L1 | இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மத்திய பகுதி என இஸ்ரோ சார்பில் புதிய 6-பகுதிகளில் புதிய ஆராய்ச்சி மையங்கள் தொடங்க திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

இஸ்ரோவின் சூரியன் குறித்த ஆய்வு ஆதித்யா-எல் 1 திட்டமும், சந்திரனை நோக்கி விண்வெளி பயணம் ஆய்வுகளும் முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் நிறைவடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தொலையா வட்டம் பகுதியிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஆதித்யா எல்1 என்று பெயரிடப்பட்ட திட்டம் மற்றும் சந்திரனை நோக்கி மீண்டும் ஒரு விண்வெளி பயணம்  திட்டம் இந்தியர்கள் விண்வெளி பயணம் (உள்நாட்டு கட்டமைப்பால்) போன்ற திட்டங்களின் ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் வெகு விரைவில் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்.. ஆளுநரிடம் புகார் அளிக்க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முடிவு
 மேலும் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவும் ஏலத்திற்கும் பி.எஸ்.என்.எல் முன் வரலாம் என்றும் அதே வேளையில் தகவல் தொடர்பு துறையில் தனியார் பங்களிப்பும் போட்டியும் இருந்தால்தான் சேவைகளை குறைந்த செலவில் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் 4-ஜி 5-ஜி சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்தியா முழுக்க முழுக்க சொந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவாக உள்ளது என்றும் கூறினார்.


மேலும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மத்திய பகுதி என இஸ்ரோ சார்பில் புதிய 6-பகுதிகளில் புதிய ஆராய்ச்சி மையங்கள் தொடங்க திட்டம் இருப்பதாகவும் கூறினார்.


செய்தியாளர் : சஜயகுமார் தனஜெயன் நாயர்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: ISRO

அடுத்த செய்தி