குமரியில் அழிந்து வரும் அரிய இன ஆமைகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறை
குமரியில் அழிந்து வரும் அரிய இன ஆமைகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறை
அரிய இன ஆமை
Kanyakumari District : வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு கன்னியாகுமரி துவாரகா பதி கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரையில் வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 126 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இவ்வருடம் மட்டும் 5993 ஆமை முட்டைகள் பாதுகாத்து வரும் நிலையில் இதுவரை 1317 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குமரி கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி என்ற ஆமை வகைகள் தற்போது அழிந்து வருகின்றன. இந்த ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக முகிலன் குடியிருப்பு, மணக்குடி ஆகிய கடல் பகுதிகளில் ஆமைகள் அதிக அளவு உள்ளது. ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசன் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் நடைபெறும். கடந்த 3 மாதத்திற்கு மேலாக கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற ஏராளமான முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு கன்னியாகுமரி துவாரகா பதி கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரையில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்தன. அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 126 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர்.
இவ்வருடம் மட்டும் 5993 ஆமை முட்டைகள் பாதுகாத்து வரும் நிலையில் இதுவரை 1317 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது. இதனை அப்பகுதி மக்களும் கடற்கரை சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
செய்தியாளர் : ஐ.சரவணன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.