குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு இருகே செயல்பட்டு வரும் காமராஜ் நினைவு மேல்நிலைப் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து வருபவர் ஆர்யா என்ற மாணவி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக வாள் விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-28 ம் தேதிகளில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தில் வந்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆர்யாவுக்கு உற்சாக வரவேற்பு
இதைத்தொடர்ந்து வெண்கல பதக்கம் பெற்று திரும்பிய ஆர்யா, தான் பயிலும் பள்ளி வந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பயிலும் மாணவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, உற்சாக வரவேற்பு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
Must Read : ஆக்கிரமிப்பு என கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அகற்றிய அதிகாரிகள்... விவசாயிகள் கண்ணீர்
அப்போது பேசிய ஆர்யா, தேசிய அளவில் தான் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தன்னுடைய வெற்றிக்கு ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.