ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணப்பட்டுவாடா செய்வதாக தந்தை மீது குற்றம்சாட்டிய மகன்... முன்னாள் எம்.எல்.ஏ. வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை!

பணப்பட்டுவாடா செய்வதாக தந்தை மீது குற்றம்சாட்டிய மகன்... முன்னாள் எம்.எல்.ஏ. வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை!

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

Nagercoil : நாகர்கோவிலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகளுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்வதாக தந்தை மீது மகன் குற்றம்சாட்டிய நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகளுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்வதாக தன் தந்தை மீது மகன் குற்குற்றம்சாட்டிய நிலையில்,  முன்னாள் எம்.எல்.ஏ.  நாஞ்சில் முருகேசன் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். 

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் 11ஆவது வார்டில் அதிமுக  முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா அதிமுக சார்பிலும், அவரை எதிர்த்து நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யா சிவராம் (மகன் சிவராமின் மனைவி) பாஜக சார்பிலும் போட்டியிடுகிறார்கள்.

நாளை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், நாகர்கோவில் வடசேரி கலுங்கடி பகுதியில்  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது மகள் ஸ்ரீலிஜாவுக்கு ஆதரவாக  பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும்படைக்கு தகவல் சென்றது. அதன் அடிப்படையில் நாஞ்சில் முருகேசன் வந்ததாக கூறப்படும் காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி  சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த காரில் நாஞ்சில் முருகேசன் இருந்தார். பணம் பட்டுவாடா செய்வது குறித்து தகவல் அறிந்த பாஜக வேட்பாளர்  திவ்யாவின் கணவரும் நாஞ்சில் முருகேசன் மகனுமான சிவராம் அங்கு வந்தார். இதனைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் கார் டிரைவருக்கும் நாஞ்சில் முருகேசன் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Must Read : காவல்துறையினர் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் வேலை பாக்குறாங்க.. கோவையில் ஜனநாயகப் படுகொலை - எஸ்.பி. வேலுமணி தலைமையில் போராட்டம்

இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போதிலும் பணம் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : ஐ.சரவணன், நாகர்கோவில்.

First published:

Tags: Local Body Election 2022, Nagercoil