Home /News /tamil-nadu /

கன்னியாகுரியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலுக்கு 15 நாட்கள் சிறை

கன்னியாகுரியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலுக்கு 15 நாட்கள் சிறை

 டி.எஸ்.பி.,க்கு 15 நாட்கள் சிறை

டி.எஸ்.பி.,க்கு 15 நாட்கள் சிறை

Kanyakumari District : தொடர்ந்து அவர் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கும் கணக்கில் கொண்டுவராத 5  லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., தங்கவேலு, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாயகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (66) . இவர்  நாகர்கோவிலில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் பணமாகவும், வங்கி மூலம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த கட்டிடத்திற்கு உரிய அனுமதி இல்லை என மாநகராட்சி மூலம் தெரிய வந்ததை  தொடர்ந்து ராமசாமியிடம் கொடுத்த பணத்தை சிவகுரு திருப்பி கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ராமசாமி வீட்டில் சென்று சிவகுரு   தர்ணாவில் ஈடுபட்டதோடு, இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலும்  புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இப்புகாரை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி., தங்கவேலு இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈட்பட்டதோடு இப்பிரச்சினையை  தீர்த்து வைக்க லஞ்சம் கேட்டும் வந்துள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ராமசாமி தான் வாங்கிய பணத்திற்கு ஈடாக அவரது நிலம் ஒன்றை சிவகுரு  கிரயம்  செய்து கொடுத்துள்ளார். ஆனால் இது தெரியாத நிலையில் மீண்டும் சிவ குரு குற்றாலத்தை தொடர்பு கொண்ட டி.எஸ்.பி., தங்கவேலு  தனக்கு 5 லட்சம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்,  ஆனால் இப்பிரச்சினை முடிக்கப்பட்டு விட்டதை  தெரிந்த உடன் இரு தரப்பினரிடமும் தலா 15 லட்சம் வீதம் லஞ்சமாக கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    ALSO READ |   செல்போனில் கேம் விளையாடியதால் வந்த விபரீதம்... மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட மாணவன்
     

    இந்நிலையில் தான் சிவகுரு குற்றாலம்  கடந்த 28 ம் தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் தவணையாக  5 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதித்து, ரசாயனம்  தடவிய 500 மற்றும் 2000 ரூபாய் கட்டுகளாக  5 லட்சம் ரூபாயை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவு  அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி., தங்கவேலு விட ம் கொடுக்கப்பட்ட போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பீட்டர் பால் தலைமையிலான போலீசார், தங்கவேலுவை  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.



    மேலும் தொடர்ந்து அவர் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கும் கணக்கில் கொண்டுவராத 5  லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டுள்ளது. தற்போது வரை 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள  நிலையில், டி.எஸ்.பி., தங்கவேலுவை  மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனைக்கு  பின்னர் நீதிமன்றத்தில்,  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் விசாரணை செய்த மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற  நீதிபதி மாயகிருஷ்ணன், குற்றம்சாட்டப்பட்ட  டி.எஸ்.பி., தங்கவேலுவை வரும் 20 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க   உத்தரவிட்டார்.

    டி.எஸ்.பி., தங்கவேலு(52) கோவை மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவுத்துறை டி.எஸ்.பி., யாக கடந்த 2021 ஜூலை மாதம் பொறுப்பேற்று கொண்டவர். இதற்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் டி.எஸ்.பி., யாகவும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம் டி.எஸ்.பி., யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : ஐ.சரவணன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kanyakumari

    அடுத்த செய்தி