நாகர்கோவில் அருகே மதுபோதையில் தகராறு; இரண்டு வாலிபர்களுக்கு கத்தி குத்து: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!

மதுபோதையில் தகராறு: இருவருக்கு கத்திகுத்து!

இதனால் ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ் (24) என்பவரை அழைத்து வந்து ஸ்டாலினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுபோதையில்  ஏற்பட்ட தகராறில் இரண்டு வாலிபர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். இதில், சம்பவ இடத்திலே புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (24). கூலி வேலைக்கு செல்லும் இவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இவர் இன்று அதேப்பகுதியில்  உள்ள டாஸ்மாக்  கடையில் மது வாங்கி அருகிலுள்ள குளத்தின் கரையில் இருந்து அருந்தியுள்ளார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் மது போதையில் ஐயப்பனை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ் (24) என்பவரை அழைத்து வந்து ஸ்டாலினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடம் வந்த போலீசார்  படுகாயங்களுடன் கணப்பட்ட சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Also read: சேலத்தில் இருந்து தருமபுரி டாஸ்மாக் கடைக்கு படையெடுக்கும் குடிமகன்கள்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்!

  ஸ்டாலின் மீது ஏற்கனவே கத்திக்குத்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கொலை செய்திருப்பதும்  தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவான  ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோரை கொலை வழக்கு பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

  செய்தியாளர் - ஐ.சரவணன்
  Published by:Esakki Raja
  First published: