Home /News /tamil-nadu /

ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆமைவேகத்தில் நடைபெறும் திருப்பணி... கும்பாபிஷேகம் நடைபெறுமா என பக்தர்கள் கேள்வி

ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆமைவேகத்தில் நடைபெறும் திருப்பணி... கும்பாபிஷேகம் நடைபெறுமா என பக்தர்கள் கேள்வி

ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்

ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்

மாவட்ட நிர்வாகமும் இந்துசமய அறநிலைத்துறையும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு 64 நாட்களே உள்ளநிலையில் ஆமைவேகத்தில் நடைபெறும் திருப்பணிகளால் முழுமையான கும்பாபிஷேகம் நடைபெறுமா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேவபிரசன்னத்தின்படி இந்துசமய அறநிலைத்துறை வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தது.

அதற்கான கும்பாபிஷேக விழா வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி துவங்குகிறது. இதையடுத்து  கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 64 நாட்களே உள்ள நிலையில் திருக்கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறைவான பணியாளர்களை கொண்டு ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக மூலிகை ஓவியம் வரையும் பணிகள் 50சதவீதம் கூட நிறைவடையவில்லை. மேலும்  இந்த ஓவியபணிகள் முழுமைமாக நிறைவடைய ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகுமென ஓவியர்கள் தெரிவிக்கின்றனர்.



அதேபோல் மரதச்சுபணிகள் பாதியில் நிறுத்தபட்டு சில மாதங்களாக மரப்பணிகள் நடைபெறவில்லை. மேலும் திருக்கோவிலில் புதிதாக நாட்டபட்ட கொடிமரமும் பணிகள் நடைபெறாமல் டார்பாயிலின் சுற்றிவைக்கபட்டுள்ளது.



இதேபோல் ஆலயத்தின் முன்புறம் பரளியாற்றின் குறுக்கே அமைக்கபட்டிருந்த பாலம் கடந்த மழைகாலத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டதையடுத்து புதிய பாலம் அமைக்கபடும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டநிலையில் அதற்கான பணிகளும் நடைபெறவில்லை.



இதனால் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து முழுமைமான கும்பாபிஷேகம் நடைபெறுவதில் சந்தேகம் உள்ளதாகவும் அதிகமான பணியாட்கள் கொண்டு விரைந்து செயல்பட்டால் மட்டுமே திருப்பணிகள் அனைத்தும் நிறைவடையுமெனவும் மாவட்ட நிர்வாகமும் இந்துசமய அறநிலைத்துறையும் பணிகளை விரைந்து முடிக்க அதற்காக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kanyakumari

அடுத்த செய்தி