ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக-கேரளா எல்லையில் நடந்த சிபிஎம் நிகழ்வில் கொரோனா விதிமீறல்

தமிழக-கேரளா எல்லையில் நடந்த சிபிஎம் நிகழ்வில் கொரோனா விதிமீறல்

Kanyakumari : சிபிஎம் மாநாட்டை முன்னிட்டு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் 501 சிறுமிகள், பள்ளி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari : சிபிஎம் மாநாட்டை முன்னிட்டு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் 501 சிறுமிகள், பள்ளி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari : சிபிஎம் மாநாட்டை முன்னிட்டு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் 501 சிறுமிகள், பள்ளி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் கேரளா மாநில சிபிஎம் கட்சி மாவட்ட மாநாட்டை ஒட்டி கொரோன விதிமுறைகள் மீறி 501 பெண்கள் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கேரளா சிபிஎம் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு வரும் ஜனவரி 14 முதல் 16 வரை குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பாறசாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரளா முதல்வர் பிணராய் விஜயன் உட்பட்ட மாநில தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

  மாநாட்டை முன்னிட்டு கட்சி சார்பில் பல நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா , ஒமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளில் 50 பேர்  மட்டுமே கொரோன பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பின் பற்றி  கலந்து கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அம்மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது.

  இந்நிலையில் கேரளா மாநிலம் தமிழக-கேரள எல்லை பாறசாலை அருகே மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  சிறுமிகள், பெண்கள் என 501 பேர் பங்கேற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.  கொரோனா விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் பிணராயி அரசின் செயல்பாடுகளை வாழ்த்தும் பாடலுக்கு ஏற்று நடனம் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது.

  Read More : சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!

  இந்நிகழ்வில், போலீட் பியூரோ உறுப்பினர் M.A பேபி , திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பன் உட்பட கட்சி பிரமுகர்கள் உட்பட நூற்று கணக்கான கட்சி தொண்டர்கள் முன்னிலையில் இந்த விதிமுறைகள் மீறி நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று  கூறுகையில் , கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ள கட்சி மாநாடுகளில் பிணராய் விஜயன் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோணா கட்டுப்பாடு விதிமுறைகள் பின் பற்றி மாநாடுகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

  Must Read : வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

  இந்நிலையில், இந்த விதி மீறல் நடைபெற்றதும் குறிப்பிட்ட தக்கது. மெகா திருவாதிரை நடனம் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஆளும் கட்சி சார்பில் நடக்கும் மாவட்ட மாநாடு முன்னிட்டு விதிமுறைகள் மீறி மாஸ்க் அணியாமல் 501 சிறுமிகள், பள்ளி மாணவிகள்,  பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : சஜய குமார், கன்னியாகுமரி 

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona safety, CPM, Kanyakumari