பாரத மாதா குறித்த சர்ச்சை பேச்சு.. பாதிரியாரை தொடர்ந்து மேலும் ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட ஸ்டீபன்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் தமிழகம் முழுவதும் உள்ள இந்துஅமைப்புகள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் விவகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த வாரம் கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பனைவிளை பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா, பாரதமாதா , இந்துமதம் , மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

  Also Read: மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகளை நா கூசாமல் திருடர்கள் என்பதா? பி.டி.ஆருக்கு அண்ணாமலை கண்டனம்!

  பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் தமிழகம் முழுவதும் உள்ள இந்துஅமைப்புகள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவர்மீது சட்டவிரோதமாக கூடுதல் , இரண்டு ஜாதி , இரண்டுதரப்பு, இரண்டு மதம் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் வகுத்துதல் ,மதநம்பிகளை அவதூறுபரப்புதல்,என 7 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிரியா ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Also Read: சர்ச்சை பேச்சால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில்  அந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதல் குற்றவாளியுமான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றார். இவரை தனிப்படை போலீசார் காரோடு பகுதியில் வைத்து கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளதால் அவன் மீது குண்டர் சட்டம் போட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

  செய்தியாளர் - சஜயகுமார்   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: