ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளை : கேரளாவுக்கு கடத்திச் சென்ற 14 லாரிகள் சிறைபிடிப்பு

தமிழகத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளை : கேரளாவுக்கு கடத்திச் சென்ற 14 லாரிகள் சிறைபிடிப்பு

கன்யாகுமரி செய்திகள்

கன்யாகுமரி செய்திகள்

Kanyakumari District | கனிம வள கடத்தலை தடுக்க பல்வேறு அரிசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு முறையான ஆவணம் இல்லாமல் மற்றும் அதிக பாரத்தோடு கனிமவளம் கடத்தி சென்ற 14 லாரிகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்தி செல்லும் நிகழ்வு தொடர் கதையாக நடந்து வரும் நிலையில் கனிம வள கடத்தலை தடுக்க பல்வேறு அரிசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும் போது மட்டும் கண்துடைப்பிற்காக ஒரு சில வாகனங்களை மட்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். மற்ற நேரங்களில் மாவட்ட மற்றும் மாநில எல்லை பகுதிகளான ஆரல்வாய்மொழி, களியக்காவிளை உள்ளிட்ட சோதனை சாவடிகளில் இருக்கும் காவலர்கள் பணத்தை பெற்று கொண்டு வாகனங்களை கடத்தி விட்டு வந்தனர்.

இவ்வாறு கனிம வளங்களை கடத்தி செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அதிக பாரத்துடனும் சாலைகளில் அதிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பயிற்சி ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையிலான போலீசார் தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட காவல்நிலைய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ALSO READ |  சிங்கப்பூர், மலேசியா போல் தமிழக பொருளாதாரத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்துவார் - அமைச்சர் சேகர் பாபு

அப்போது அந்த சாலைகளில் கனிம வளங்களை ஏற்றி கொண்டு அணிவகுத்து வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 20 க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தியதில் சரியான ஆவணம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எடையுடன் சுமார் 6 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. மீதமுள்ள 14 லாரிகளை போலீசார் சிறைப்பிடித்து சுமார் 2 லட்சம் ருபாய் வரை அபராதம் விதித்து உள்ளனர்‌. மேலும் வரும் நாட்களில் முறையான ஆவணம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எடையுடன் இல்லாமல் வரும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kanyakumari, Kerala