Home /News /tamil-nadu /

மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்- விஜயதாரணி

மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்- விஜயதாரணி

விஜயதாரணி

விஜயதாரணி

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை முடக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

    மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. அண்மையில், ஆளுநர் ஜக்தீப் தன்கரை மம்தா பானர்ஜி ட்விட்டரில் பிளாக் செய்தார்.

    இந்நிலையில், மாநிலங்களவையில் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

    இவ்வாறு ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துவரும் சூழலில் திடீர் திருப்பமாக மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளை ஏற்றே சட்டப்பேரவை முடக்கப்பட்டதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தரப்பிலோ, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிலோ எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆளுநரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    திமுக கொடுத்த 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை


    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, ‘மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றதை முடக்கிய விவகாரத்தை ஜனநாயகத்திற்கு புறம்பான ஒன்றாக தான் பார்க்க வேண்டியதாக உள்ளது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றம் முடக்கப்பட்டதாக ஆளுநர் கூறியுள்ளார். இதில் எந்த வித அர்த்தமும் நியாயமும் இல்லை.


    இதில் என்ன உண்மை இருக்கிறது என்பது புரியாத சூழல் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து தெளிவான விளக்கம் மக்களுக்கு அளிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Congress

    அடுத்த செய்தி