பஸ்சின் மீது ஏறிய பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர்.. வீடியோ வைரலானதால் வழக்குப் பதிவு
பஸ்சின் மீது ஏறிய பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர்.. வீடியோ வைரலானதால் வழக்குப் பதிவு
பஸ்சின் மீது ஏறி இருந்த பயணிகள்
Trending : தனியார் பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அளவுக்கு மீறிய ஏரிய பயணிகளை பஸ்சை விட்டு வெளியேற கேட்டுள்ளனர். இருந்தும் பயணிகள் இறங்காததால் ஓட்டுனர் பஸ்ஸின் மேல் புறத்தில் இருந்த பயணிகளுக்கும் மேலே ஏறி டிக்கெட் கொடுத்துள்ளார்.
பாலக்காட்டில் பஸ்சின் மீது ஏறி இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக நிலையில் ஒட்டுனரின் மேல் கேரளா போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு நென்மாறா - கோழிக்கோடு வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் அந்த பகுதியில் நடைபெறும் கம்ப வெடிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்கள் , தனியார் பேருந்தின் உட்புறம் உட்பட பஸ்சின் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இவர்களுக்கு நடத்துனர் பஸ்ஸின் மேல் பகுதியில் சென்று டிக்கெட்டும் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரவியுள்ளன.
தனியார் பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அளவுக்கு மீறிய ஏரிய பயணிகளை பஸ்சை விட்டு வெளியேற கேட்டுள்ளனர். இருந்தும் பயணிகள் இறங்காததால் ஓட்டுனர் பஸ்ஸின் மேல் புறத்தில் இருந்த பயணிகளுக்கும் மேலே ஏறி டிக்கெட் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து நடத்துனர் உட்பட ஒட்டுனரின் மேல் கேரளா போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.