கன்னியாகுமரியில் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு மார்தாண்டம்துறை பகுதியை சேர்ந்த ஆபிரகாம் என்ற மீன்பிடி தொழிலாளி மனைவி ஜெனட் 38 இவர் பாலவிளை சரக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கழற்ற சொல்லி மிரட்டி உள்ளனர்.
அப்போது ஜெனட்டின் பர்சில் இருந்த 500 ரூபாயை பறித்துள்ளனர். உடனே அவர் சத்தம்போடவே அந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி அந்த இருசக்கர வாகனம் சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று இரவு நடைகாவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த இருவரையும் போலீசார் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
Must Read : டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்
விசாரணையில், அவர்கள் காஞ்சாங்குடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் 26 கச்சேரிநடை பகுதியை சேர்ந்த அனிஷ் 29 என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல நாட்களாக நோட்டமிட்டு, கடந்த 21 ம் தேதி பல பெண்ணிடம் நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும், இவர்கள் மீது பல காவல்நிலையங்களில் பலவழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இவர்கள் மீது மீண்டும் வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.