முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

Kanyakumari : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் ஜெயபிரகாஷ்-ஐ கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டை நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றிவளைத்தனர்.

ஜெயப்பிரகாஷ்

அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரை முற்றுகையிட்டதால் கைது முயற்சி தோல்வியடைந்தது. தொடர்ந்து நான்குமணி நேரமாக போலீசாரும் பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜெயபிரகாஷ்-ஐ பாஜகவினர் நாங்கள் காவல் நிலையம் அழைத்து வருகிறோம் என கூறி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்தில் திரண்ட பாஜகவினர்

Must Read : செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

நள்ளிரவில் பாஜக நிர்வாகி கைது செய்ய வீட்டை போலீசார் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: BJP, Kanyakumari, MK Stalin