Home /News /tamil-nadu /

தமிழக-கேரள எல்லையில் நடந்த சிபிஎம் நிகழ்வில் கொரோனா விதிமீறல் : 550 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக-கேரள எல்லையில் நடந்த சிபிஎம் நிகழ்வில் கொரோனா விதிமீறல் : 550 பேர் மீது வழக்கு பதிவு

கொரோனா விதிமீறல்

கொரோனா விதிமீறல்

Kanyakumari : தமிழக-கேரள எல்லை பாறசாலை அருகே சிபிஎம் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு சிறுமிகள், பெண்கள் என 501 பேர் பங்கேற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக கேரளா எல்லையில், கேரள மாநில சிபிஎம் கட்சி மாவட்ட மாநாட்டை ஒட்டி கொரோன விதிமுறைகள் மீறி 501 பெண்கள் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 550 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரள சிபிஎம் கட்சி சார்பில் திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு வரும் ஜனவரி 14 முதல் 16 வரை கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் பாறசாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் உட்பட்ட மாநில தலைவர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த மாநாட்டை முன்னிட்டு கட்சி சார்பில் பல நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா மாநிலத்தில் திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகளை பின் பற்றி கலந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அம்மாநில அரசு விதித்துள்ளது.

    ஆனால், தமிழக-கேரள எல்லை பாறசாலை அருகே சிபிஎம் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு சிறுமிகள், பெண்கள் என 501 பேர் பங்கேற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொரோனா விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் கேரள அரசின் செயல்பாடுகளை வாழ்த்தும் பாடலுக்கு நடனம் ஆடப்பட்டது. இந்த நிகழ்வில் போலீட் பியூரோ உறுப்பினர் M.A பேபி , திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பன் உட்பட கட்சி பிரமுகர்கள் உட்பட நூற்று கணக்கான கட்சி தொண்டர்கள் முன்னிலையில் இந்த விதிமுறைகள் மீறி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக, கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ள கட்சி மாநாடுகளில் பினராயி விஜயன் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின் பற்றி மாநாடுகள் நடத்தப்படும்” என தெரிவித்திருந்தார்.

    Read More : பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. போக்சோ சட்டத்தில் கைது

    மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஆளும் கட்சி சார்பில் நடக்கும் மாவட்ட மாநாடு முன்னிட்டு விதிமுறைகள் மீறி மாஸ்க் அணியாமல் 501 சிறுமிகள், பள்ளி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    Must Read : ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை

    இந்நிலையில், திருவாதிரை நடன நிகழ்ச்சியில் கொரோனா விதிமீறல் நடந்ததாக பாறசாலை போலீசார் 550 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona, CPM, Kanyakumari

    அடுத்த செய்தி