Home /News /tamil-nadu /

தாமிரபரணியில் மணல் கொள்ளை.. அம்பலப்படுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

தாமிரபரணியில் மணல் கொள்ளை.. அம்பலப்படுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

மணல் கொள்ளை

மணல் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கோதையாறு, பரழியாறு உட்பட பல ஆறுகள் சேர்ந்து 62 கிலோமீட்டர் தூரம் பாய்தோடி தேங்காய்பட்டிணம் பகுதியில் அரபிகடலில் கலக்கிறது.

  • News18
  • Last Updated :
தாமிரபரணி ஆற்றுபடுகையில் செங்கல் சூளைகளால் தொடரும் மண்கொள்ளை குறித்து புகார் கொடுத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கோதையாறு, பரழியாறு உட்பட பல ஆறுகள் சேர்ந்து 62 கிலோமீட்டர் தூரம் பாய்தோடி தேங்காய்பட்டிணம் பகுதியில் அரபிகடலில் கலக்கிறது.

மூவாற்றுமுகம் , சிதறால் , திக்குறிச்சி, உண்ணாமலைகடை, அதங்கோடு, குழித்துறை உட்பட தாமிரபரணி கரையோரம் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில செங்கல் சூளைகள் மூன்றடி ஆழத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு அறுபது அடிவரை மண் எடுத்து செங்கல் தயார் செய்கின்றனர்.

இதனால் ஆறு திசைமாறி விவசாய நிலங்கள் மற்றும் , வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக உண்ணாமலை கடை பேருராட்சி தச்சன்விளாகம் பகுதியில் டென்னிஸ் என்பவர் நடத்தி வரும் செங்கல் சூளையில் அறுபது அடிக்கும் மேல் மண் அள்ளபட்டிருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து காணபடுகிறது.

இது போன்று ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட ரப்பர்,வாழை போன்ற விவசாய நிலங்கள் இங்கு மண் எடுக்கும் காரணத்தால்  தாமிரபரணி ஆற்றின் திசை மாறி ஆற்றுநீர் புகுந்துள்ளது. இனி வரும் மழை காலங்களில் ஏற்படும் ஆற்று வெள்ளம் காரணமாக  மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது சம்பந்தமாக அந்த பகுதி இளைஞர்கள் நடத்தும் உதவி மையம் மூலம் இது சம்பந்தமாக சிஎம் செல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாராதாண்டம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த பகுதியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த  நிலையில் சுதன் என்ற இளைஞர் மீது டென்னிஸ் என்ற செங்கல் சூளை உரிமையாளர் திட்டமிட்டு அவரது  ஊழியரை தாக்கியதாக மார்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Also read... அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - நோயாளிகள் கடும் அவதி

இதற்கு சுதன் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்கள் மூலம் தன்மீது பொய்வழக்கு போடபட்டது குறித்த வீடியோ வெளியிட்டார். இது சம்பந்தமாக சுதன் இன்று மாவட்ட காவல்கண்காணிப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் அளித்தார். இந்த கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு தன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மட்டுமின்றி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் செங்கல் சூளைகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத விட்டால் இவர்கள் மண் எடுப்பதற்காக வெட்டும் பாதகங்கள் மூலம், வரும் காலங்களில் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே நிதர்சன உண்மை என சுதன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kanniyakumari

அடுத்த செய்தி