ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புகைப்படம் எடுக்க சாலையில் நின்றவர்களை தூக்கி வீசிய கார் ... பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புகைப்படம் எடுக்க சாலையில் நின்றவர்களை தூக்கி வீசிய கார் ... பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சாலையில் நின்றவர்களை தூக்கி வீசிய கார்

சாலையில் நின்றவர்களை தூக்கி வீசிய கார்

ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் சாலையின் நடுவே  நின்று கொண்டு  புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே நின்ற இரண்டு பேரின் மீது மோதியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரள மாநிலம் மலப்புறத்தில் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே நின்ற இருவரை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் மலப்புறத்தில் காவல் நிலையம் முன்பு நேற்றைய தினம் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டத்தில்  ஈடுபட்ட இரண்டு பேர் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே  நின்று கொண்டு  புகைப்படம் எடுத்துள்ளனர்.

இவர்கள் புகைப்படம் எடுக்கும் அதேவேளையில்  ஓட்டுனரின் கவனக்குறைவால் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே நின்ற இரண்டு பேரின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும்  சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் | மது போதையில் காரை ஓட்டி 25 பைக் , 4 கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ரவுடி... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மலப்புறம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: CCTV, CCTV Footage, Kanyakumari