அதிவேகமாக வந்த சொகுசு கார் மீன் கடையில் மோதி விபத்து... தொழிலாளி உயிரிழப்பு
அதிவேகமாக வந்த சொகுசு கார் மீன் கடையில் மோதி விபத்து... தொழிலாளி உயிரிழப்பு
வேகமாக வந்து மீன் கடையில் மோதிய கார்
Viral Video | அதிவேகத்தில் வந்த அந்த சொகுசு கார் சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மீன் கடைக்குள் புகுந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் அதிவேகத்தில் வந்த கார் மீன் கடைக்குள் புகுந்து, விபத்திற்குள்ளானது. இதில் அசாம் மாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் , சிங்கவனம் என்னும் பகுதியில் இரு நாட்கள் முன்பு சாலையோரம் செயல்பட்டு வரும் மீன் கடை ஒன்றில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கடைக்குள் புகுந்து ஏற்றபட்ட விபத்தில் அசாம் மாநில தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த நிலையில் அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகத்தில் வந்த அந்த சொகுசு கார் சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மீன் கடைக்குள் புகுந்துள்ளது. இதில் கடையின் முன் வேலை செய்து கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அனில் கேமத் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்றும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் வயநாடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.