ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குமரி மீனவர்களின் படகை அத்துமீறி சிறை பிடித்த கேரள மீன்வளத்துறை அதிகாரிகள்

குமரி மீனவர்களின் படகை அத்துமீறி சிறை பிடித்த கேரள மீன்வளத்துறை அதிகாரிகள்

மீன்பிடி படகு

மீன்பிடி படகு

Kanyakumari : கன்னியாகுமரி மீனவரின் குஜராத் பதிவெண் கொண்ட படகை அனுமதி இல்லாமல் கரை ஒதுங்கியதாக கூறி கொச்சி மீன்வளத்துறை அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரபின். இவருக்கு செந்தமான ஹெவன் என்ற விசைபடகை குஜராத் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன் பிடிப்பதற்க்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்பவரது பெயரில் பெயர் மாற்றம் செய்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி பிரபின் உட்பட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 பேருடன் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சுமார் 500 நாட்டிகல் தொலைவில் கர்நாடக மாநிலம் ரத்தினகிரி  ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்துவிட்டு கிடைத்த மீன்களை விற்பனை செய்வதற்க்காக கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் படகு கரை ஒதுங்குவதற்க்கான அனுமதி கடிதத்தை கேட்டுள்ளனர் அதனை படகில் இருந்த மீனவர்கள் காண்பித்த போது, ஆன்லைன் பதிவு தவறுதலாக இருந்துள்ளது. இதனையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் படகை துறைமுகத்தில் அனுமதிக்க வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கான துறைமுக அனுமதி கடிதம் ருபாய் 25 ஆயிரம் செலுத்தவேண்டும் என கூறி உள்ளனர்.

அதற்கு மீனவர்கள் சம்மதம் தெரிவித்து பணத்தை கட்டி ரசீதை பெற்றுள்ளனர். இதனையடுத்து மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கிய மீன்வளத்துறை அதிகாரிகள், சிறிதுநேரம் கழித்து மீண்டும் படகை சிறை பிடிப்பதாக கூறி படகில் இருந்த சுமார் 15 லட்சம் ருபாய் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.

மேலும், அனுமதி இல்லாமல் துறைமுகத்திற்குள் நுழைந்ததால்  1 லட்சத்துக்கு மேல் அபராதம் செலுத்தக்கூறி, கேரள மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டாயபடுத்தி வருவதாக குமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Must Read : மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு

மேலும் துறைமுகத்தில் கரை ஒதுங்க கட்டவேண்டிய தொகையை கட்டிய பின்பும் மீன்களை எல்லாம் பறிமுதல் செய்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் செலுத்த சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது படகு மற்றும் பறிமுதல் செய்த மீன்களை திரும்ப ஒப்படைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Fishermen, Kanyakumari, Kerala