ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

19 மாதங்களுக்கு பிறகு தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்

19 மாதங்களுக்கு பிறகு தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்

தமிழகம்-கேரள பேருந்து சேவை.

தமிழகம்-கேரள பேருந்து சேவை.

இன்று முதல் தமிழகம்-கேரளா இடையே இரு மாநில அரசு பேருந்துகளும் இயங்க தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் 19 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் இரு மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கொரோனா காரணமாக நிறுத்தபட்டிருந்த இரு மாநிலங்கள் அரசு பேருந்து சேவை 19 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கக்கப்படுகின்றன. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல தேவைக்கு ஏற்றார் போல் 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேரளா மாநிலம் வெள்ளறடை, நெய்யாற்றின் கரை, திருவனந்தபுரம் ஆகிய கேரளா அரசு பேருந்து பணிமனைகளில் இருந்தும் குமரி மாவட்டத்துக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என கேரளா அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

  நேற்று வரையில் இரு மாநில எல்லைகளில், களியக்காவிளை வரை தமிழக அரசு பேருந்துகளும், எல்லையில் மறு பகுதியில் இஞ்சிவிளை வரையில் கேரளா அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு வேலை, பள்ளி கல்லூரிகள், கூலி வேலை, மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள்  1 கிலோமீட்டர் நடந்து சென்று பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.

  Must Read : இனி 1 ரூபாய்க்கு தீப்பெட்டி கிடைக்காது.. தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு

  அதே போல் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில்  வரும் பயணிகளும் 1 கிலோமீட்டர் நடந்து சென்று பயணிக்க வேண்டிய சிரமம் இருந்த நிலையில், இன்று முதல் இரு மாநிலங்கள் இடையே இரு மாநில அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  செய்தியாளர் - சஜயகுமார், கன்னியாகுமரி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Bus, Kanyakumari, Kerala