வணிக வளாகத்தில் புகுந்து கண்ணில் பட்டவர்களை ஓட ஓட துரத்திய எருமை... 3 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறை
வணிக வளாகத்தில் புகுந்து கண்ணில் பட்டவர்களை ஓட ஓட துரத்திய எருமை... 3 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறை
கண்ணில் பட்டவர்களை ஓட ஓட துரத்திய எருமை
Buffalo Video | மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் எருமைமாட்டை பிடித்த தீயணைப்பு துறையினர். அதன் கை ,கால்களை கட்டி திருச்சூர் நகராட்சி அலுவலகத்தில் கொண்டு சென்றனர்.
எருமை மாடு ஒன்று திருச்சூரில் வணிக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை ஓட ஓட விரட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்ணில்பட்டவர்களை கொம்பால் தூக்கி எறிந்த எருமை மாடு , 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் சங்கரய சாலை பகுதியில் மிரண்டு ஓடிய எருமைமாடு ஒன்று அங்குள்ள வணிக வளாகத்துக்குள் நுழைந்து எதிரே வந்தவர்களை முட்டி தள்ளி விட்டு அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. கண்ணில்பட்டவர்களை ஓட ஓட துரத்தியுள்ளது. கடைகளில் உள்ள பொருட்கள் உட்பட வணிக வளாகத்தின் முன் நின்ற ஒரு பெண் உட்பட 3 பேரை முட்டி தள்ளியுள்ளது. எதிரில் வந்த ஒவ்வொருவரையும் விடாமல் துரத்திச் சென்று உள்ளது.
இதுதொடர்பாக தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் எருமைமாட்டை பிடித்த தீயணைப்பு துறையினர். அதன் கை, கால்களை கட்டி திருச்சூர் நகராட்சி அலுவலகத்தில் கொண்டு சென்றனர். தொடர்ந்து எருமை மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.