• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவை பின்தள்ளி பாஜக முன்னேறுகிறதா? - அண்ணாமலை விளக்கம்

அதிமுகவை பின்தள்ளி பாஜக முன்னேறுகிறதா? - அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட அண்ணாமலை, எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பாஜக பின்தள்ளி முன்னேறுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசினார்.

  • Share this:
    வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது முதல்வராக இருக்கும் நிலையில் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 8000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருப்பதிசாரம் பகுதிகளில் வெள்ள சேதத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குமரி மாவட்டம் வருகை தந்தார். தோவளை பகுதியில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்ட அவர் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பதிசாரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் கேட்டு போராட்டம் அறிவித்துள்ளோம்.

    தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசிக்கொண்டு இருக்கிறோம் ஆகவே தமிழகத்தில் பாஜக மிகபெரிய எழுச்சியாக இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டு விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் 8000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளார்.

    இதனை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. காரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் சென்று பார்வையிடுவதால் மக்கள் பிரச்சினை தெரியாது. அவர்களிடம் பேசவேண்டும். முதலமைச்சர் இன்னும் கூட கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

    Must Read : ஆதிக்க கலாச்சாரத்தை தகர்த்தெரிய முடியவில்லை: சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்!

    எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பாஜக பின்தள்ளி முன்னேறுகிறதா? என்ற கேள்விக்கு; “அப்படியில்லை சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பணியை செய்கிறோம் அது மக்களுடைய கருத்து” என கூறினார்.

    செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: