Home /News /tamil-nadu /

அசுரர்கள் களையெடுப்பு நடந்து தமிழகத்தில் ஆட்சி அகற்றப்படும் - அண்ணாமலை அதிரடி

அசுரர்கள் களையெடுப்பு நடந்து தமிழகத்தில் ஆட்சி அகற்றப்படும் - அண்ணாமலை அதிரடி

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai | நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
அதிவிரைவில் தமிழகத்திலும் கேரளாவிலும் அசுரர்கள்  களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் காளிமலை பொங்கல் நிகழ்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கு நடந்த வாழ்த்தரங்கில் சிறப்பு உரையாற்றிய அவர், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், இரத்த தான கொடையாளர்கள் , இயற்கை விவசாயிகள் , பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர் , இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் , சிறந்த ஆன்மீகத்தை போதிப்பவர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை. கட்சித் தொண்டர்கள் , தலைவர்கள் நம்மை தயார்ப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆன்மா சுத்தப்படுத்தபட்டு கொண்டு அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான்.



அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் , தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும். நம் ஆட்சி அமையும் என பேசினார். தொடர்ந்து பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Annamalai, BJP

அடுத்த செய்தி