• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கன்னியாகுமரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

கன்னியாகுமரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

குட்டி யானை உயிரிழப்பு

குட்டி யானை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கோதமடக்கு அணை பகுதியில் குட்டியானை உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

  • Share this:
    கன்னியாகுமரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, குட்டி யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், களியல் சரக வனத்துறையினர், குட்டி யானையின் உடலை கைபற்றி, உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் மோதிரமலை அருகே கோதமடக்கு அணை பகுதி, அடர்ந்த காட்டுக்குள் உள்ளது. அந்த வன பகுதியில் கடந்த 15 தினத்திற்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

    கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், இன்று  மழை குறைந்த நிலையில் கோதமடக்கு அணை பகுதியில் குட்டியானை உடல் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இந்த யானை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    யானையின் உடலை பார்த்த பழங்குடியினர்கள் கொடுத்த தகவலின் பேரில் களியல் சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆறு மாதம் மதிக்கதக்க ஆண் யானை உடலை கைபற்றி கால்நடை மருத்துவ குழு உதவியுடன் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 16 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த பேச்சிபாறை அணையில் இருந்து 5,892 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,852 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தண்ணீர் வடிந்தாலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Must Read : கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் : தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

    இந்நிலையில், குமரி மாவட்டத்தில் மழை குறைந்ததைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகள், வீடுகளில் சூழ்ந்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கம்பங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் ஆற்றோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - சஜய குமார், கன்னியாகுமரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: