Home /News /tamil-nadu /

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களிடம் கருத்துகேட்டு அவர்கள் இங்கு படிப்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும்- அண்ணாமலை

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களிடம் கருத்துகேட்டு அவர்கள் இங்கு படிப்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும்- அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களிடம் கருத்துகேட்டு அவர்கள் இங்கு படிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மார்ச் 10ம் தேதி ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு சரித்திர நிகழ்வாக அமைய போகிறது. 2024 ல் யார் ஆட்சிக்கு வருவார் என்ற பேச்சுக்கும் விடை தெரியும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது முறை பா.ஜ.க ஆட்சிக்கு வரவுள்ளது. அதே போல் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவவிலும் ஆட்சியமைக்கவுள்ளது. மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் மக்களை எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்தார்களோ அதற்கு பதிலடியாக மக்கள் பஞ்சாப்பில் இருந்து காங்கிரசை தூக்கப் போகிறார்கள்.

இவை அனைத்தும் மார்ச் 10-ம் தேதி சரித்திர நிகழ்வாக அமைய போகிறது. அன்றே 2024 யார் வருவார் என்ற பேச்சுக்கும் விடை கிடைக்கும். 2024 ல் 400 எம்.பிக்களுக்கு அதிகமாக பெற்று பா.ஜ.க ஆட்சிக்கு  வரும்.

உக்ரைனில் இருந்து 85 முதல் 90 சதவிகிதம் மாணவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் மாணவர்கள் வர வேண்டும். வந்த பிறகு மாணவர்களிடம் கருத்து கேட்டு இங்கு படிப்பு தொடர்பாக சம்பந்தமாக பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு எடுக்கும்.

முதல்வர் என்றால் திடீர் திடீரென எங்கும் செல்ல வேண்டும். எல்லா பக்கமும் செல்லும் போது அவர் சார்ந்த தொலைக்காட்சி மைக் மட்டும் திடீர் திடீரென அங்கு வருகிறது. அது தான் புரியவில்லை என்ற அவர், ஆளுங்கட்சி தி.மு.க  13 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பிறகும் எங்களை எதிர்த்து பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர்.

மார்ச் 18-ம் தேதி பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

திமுகவின் வேட்பாளர் ஒரு இடத்தில் ஒரு ஒட்டு வாங்கி உள்ளார். திமுக தனியாக வர தைரியம் இல்லாமல் 13 கட்சியுடன் களம் கண்டுள்ளனர். ஆனால் பாஜக தனியாக களம் கண்டு தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Annamalai, Russia - Ukraine

அடுத்த செய்தி