வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை
வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை
வனப்பகுதியில் உடும்பு வேட்டை
1972-ஆம் வன உயிரின ( பாதுகாப்பு ) சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட உடும்பினை வேட்டையாடியது சட்டப்படி குற்றம் என்பதால் நால்வரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாய்கள் மற்றும் வேட்டையாடிய 4 உடும்பினை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை பகுதியில் உடும்பு வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த சாத்யகிமிராஸ் (23), நவீன் ராஜ் (25), அபிமன்யு (24) மற்றும் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பாக்கிய ஜெகேஸ் (29) ஆகிய 4 பேரும் இணைந்து 2 வேட்டை நாய்களுடன் உடும்பு வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் படி உடும்பு வேட்டையாடிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாய்கள் மற்றும் வேட்டையாடிய 4 உடும்புகளையும் பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
1972-ஆம் வன உயிரின ( பாதுகாப்பு ) சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட உடும்பினை வேட்டையாடியது சட்டப்படி குற்றம் என்பதால் நால்வரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் : ஐ.சரவணன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.