முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Fisherman Missing | கோவா அருகே விசைப்படகு மூழ்கி விபத்து.. 11 தமிழக மீனவர்கள் மாயம்

Fisherman Missing | கோவா அருகே விசைப்படகு மூழ்கி விபத்து.. 11 தமிழக மீனவர்கள் மாயம்

காணமல் போன மீனவர்களின் உறவினர்கள்

காணமல் போன மீனவர்களின் உறவினர்கள்

கோவா அருகே விசைப்படகு மூழ்கியதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள், குமரி மாவட்ட மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த 9-ம் தேதி தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் இரண்டு சிறிய பைபர் படகுகளுடன் மீனவர்கள் சென்ற நிலையில் 23ம் தேதி வரை, அவர்கள் உறவினர்களை அழைத்து பேசியுள்ளனர்.

இந்த நிலையில் வள்ளவிளையைச் சேர்ந்த ஆன்டனி என்பவர் தனது விசைப்படகில், கோவாவில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஜோசப் பிராங்கிளினின் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் உடைந்திருப்பதைப் பார்த்துள்ளார்.

இதையடுத்து அங்குள்ள ஐந்து விசைப்படகுகள் மூலம் காணாமல் போன 11 பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த வள்ளவிளை கிராம மக்கள், காணாமல் போன தங்களது உறவினர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாட்டு கப்பல் மோதி விசைப்படகுகள் உடைந்திருக்கலாம் என அங்குள்ள மீனவ மக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க... ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு..

இந்த சம்பவம் தெரிந்த குளச்சல் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வள்ளவிளை மீனவ கிராமத்தில் வந்து இந்த விபத்து சம்மந்தமாக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: D. சஜ்ஜய குமார், கன்னியாகுமரி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Fisherman, Fishing Boats Starnded, Kanyakumari