Home /News /tamil-nadu /

ஆசை வார்த்தை கூறி 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது!!

ஆசை வார்த்தை கூறி 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது!!

சிறுமிக்கு ஆன்லைனில் படிக்க பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

சிறுமிக்கு ஆன்லைனில் படிக்க பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

சிறுமிக்கு ஆன்லைனில் படிக்க பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

வாட்ஸ்அப்  குழு மூலம் அறிமுகம் ஆகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி  10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குமரி மாவட்ட இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மூலம்  அறிமுகமாகி சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை  சேர்ந்த விஷ்ணு (24) என்பவரை கேரளா மாநிலம்  கிளிமானூர் போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறுமிக்கு ஆன்லைனில் படிக்க பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மூலம் சிறுமியை அறிமுகம் ஆன விஷ்ணு  மொபைல் போனில் , நீண்ட நாட்கள் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பேசி பழகி வந்தார்.

மது போதையில் ஹோட்டல் மேனேஜரை அடித்து உதைத்த மது பிரியர்கள்... சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு

தொடர்ந்து  கடந்த மார்ச் 14 ஆம் தேதி  கேரளாவில் உள்ள சிறுமியின் பெற்றோர்கள் வெளியே சென்றதை சிறுமி மூலம் தெரிந்து கொண்ட விஷ்ணு அந்த நேரம் பார்த்து சிறுமியின் வீட்டிற்கு சென்றார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் விஷ்ணு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் நாளடைவில்  விஷ்ணுவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் கிளிமானூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் விஷ்ணு மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கேரள மாநிலம்  ஆற்றிங்கல்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி விஷ்ணுவை  சிறையில் அடைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Sexual harrasment

அடுத்த செய்தி