குமரியில் தமிழக - கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்: இ - பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு!

கேரள எல்லை சாலைகள்

எல்லை பகுதிகளில் உள்ள சிறு சாலைகள் வழியாக அதிகமான மக்கள் ஈ - பாஸ் இல்லாமல் மாவட்டத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது

  • Share this:
    கொரோணா பரவல் காரணமாக குமரியில் தமிழக - கேரளா எல்லையில் கேரளாவை இணைக்கும்  12 சாலைகள் மூடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இந்த இரண்டாவது கட்ட பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து ஒவ்வொரு அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுபோல் குமரி மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் 10-ம் தேதி பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக ஈ - பாஸ் எடுத்து வரவேண்டும் என்று அறிவித்து இதற்கான சோதனையை மாவட்டத்தில் உள்ள நெட்டா, களியக்காவிளை,. கொல்லங்கோடு ஆகிய முக்கிய எல்லை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எல்லை பகுதிகளில் உள்ள சிறு சாலைகள் வழியாக அதிகமான மக்கள் ஈ - பாஸ் இல்லாமல் மாவட்டத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லை பகுதிகளிலும் உள்ள சிறு சாலைகளை ஆய்வு செய்து அதில் களியக்காவிளை, பளுகல், கொல்லங்கோடு ஆகிய காவல்நிலைய எல்லை பகுதிகளில் உள்ள 12 சிறு சாலைள் ஆன குளப்புறம், கடுவாகுழி சாலை, களியக்காவிளை சந்தை சாலை, பனங்காலசாலை, மலையடி சாலை, தேவிக்கோடு ராமவர்மன் சிறை சாலை, புலியூர்சாலை, மாங்கோடு, எமுனா சாலை, கொல்லங்கோடு கச்சோரி நடை சாலை என சிறு சாலைகள் நேற்று முதல் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதின் பெயரில் இந்த சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த சாலைகள் மூடப்பட்டிருந்தாலும் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கும் , அங்கிருந்து குமரிக்கு வருவதற்கும் எந்த விதமான தடையும் கிடையாது. களியக்காவிளை, கொல்லங்கோடு, நெட்டா உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக செல்ல முடியும்.  இதுபோல் கேரளாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் கேரளாவிலும் இன்று முதல் ஈ பாஸ் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால் தமிழக கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளை பகுதியில் ஈ பாஸ் சோதனை இன்று முதல் துவங்கி உள்ளது..

    குழித்துறை செய்தியாளர் சஜய குமார்
    Published by:Arun
    First published: