ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளிநாட்டில் இருந்து கொண்டு பெண்களின் ஆபாச படங்களை பரப்பிய காசியின் நண்பர் அதிரடி கைது!

வெளிநாட்டில் இருந்து கொண்டு பெண்களின் ஆபாச படங்களை பரப்பிய காசியின் நண்பர் அதிரடி கைது!

கவுதம் மற்றும் காசி

கவுதம் மற்றும் காசி

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசிக்கு, பெண்களின் ஆபாச படங்களை பரப்புவதற்கு உதவி செய்த அவரது நண்பர் கவுதமை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான காசி. காசி சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. 120 பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் பேரிலும் காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் பல பெண்களை ஏமாற்றியதால் காசி மீது 2020 ம் ஆண்டு குண்டர் சட்டமும் பாய்ந்தது.காசி மீதான பாலியல் வழக்குகளை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். காசிக்கு பாலியல் குற்றங்களுக்கு உறுதுணையாக அவருடைய 3 நண்பர்கள் இருந்தனர். அதில் ஜினோ, தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நண்பரான கவுதம் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

  இதையும் படிங்க: குழந்தைக்கு அவசர சிகிச்சை.. மின்னல் வேகத்தில் 8 ஆம்புலன்ஸ்! சினிமாவை மிஞ்சிய ரியல் சம்பவம்!

  குவைத்தில் வேலை பார்த்து வந்த கவுதமை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். காசியின் நண்பரான கவுதம், காசியின் அறிவுறுத்தலின் படி பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  இது தொடர்பாக வழக்கு ப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் கவுதமை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

  இந்நிலையில், குவைத் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கவுதம் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று கவுதமை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர்.

  இதையும் படிங்க: 19-ம் தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ - கார்த்திக் சிதம்பரம் எம்.பி பகிர்ந்த சஸ்பென்ஸ்!

  நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் கவுதமை வருகிற 28-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சந்திரகலா உத்தரவிட்டார். காசி நெருங்கி பழகும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர் கவுதம் என்பதால் மேலும் பல ரகசியங்கள் வெளிவரலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CBCID, Crime News, Kanniyakumari