ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரு காலத்துல எப்படி இருந்த கதை.. இப்ப நிஷாவை நம்பி பாரதி கண்ணம்மா சீரியல்!

ஒரு காலத்துல எப்படி இருந்த கதை.. இப்ப நிஷாவை நம்பி பாரதி கண்ணம்மா சீரியல்!

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கதாப்பாத்திரமாக வாய்தா வடிவுக்கரசி ரோலில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா`அறிமுகம் ஆகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கதாப்பாத்திரமாக வாய்தா வடிவுக்கரசி ரோலில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா`அறிமுகம் ஆகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கதாப்பாத்திரமாக வாய்தா வடிவுக்கரசி ரோலில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா`அறிமுகம் ஆகியுள்ளார்.

  • 2 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் பார்வையாளர்களின் ஈர்ப்பை அதிகரிக்க, சீரியல் குழு சிறப்பு கதாபாத்திரமாக அறந்தாங்கி நிஷாவை கதையில் சேர்த்துள்ளது. கதையை நகைச்சுவை பாணியில் கொண்டு செல்ல நிஷா ஒருபக்கம் போராடி கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. விஜய் டிவியில் டாப் சீரியல் வரிசையில் இருந்த கண்ணம்மா சீரியல் தற்போது 3 அல்லது 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி விளகல் என சொன்னாலும் சீரியல் திரைக்கதையில் பின்னடைவை சந்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை. தற்போது நாயகியாக நடிக்கும் புதிய கண்ணம்மா வினுஷா தேவியின் நடிப்பில் எந்தவித குறையும் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு சீரியலில் ஏதோ ஒரு குறை இருப்பதாக தெரிகிறது.

Also Read : யாராச்சும் மனைவியை இப்படி ஏமாத்துவாங்களா? பாக்கியலட்சுமி கோபியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

வழக்கமாக பாரதியும் கண்ணம்மாவும் சண்டை போட்டால் அதை ரசிக்கும் கூட்டம் தான் இப்போது இவர்களின் டாம் & ஜெர்ரி சண்டை எரிச்சல் மூட்டுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த எண்ணத்தை மாற்ற தான் இப்போது சீரியலில் புதிய கதாப்பாத்திரமாக ’வாய்தா வடிவுக்கரசி’ ரோலில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா`அறிமுகம் ஆகியுள்ளார். கோர்ட் உத்தரவால 6 மாதம் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்துள்ள பாரதியும் கண்ணம்மாவும் இப்போது ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் நிஷா குடி வந்துள்ளார்.

கண்ணம்மா - பாரதி வழக்கு பற்றி தெரிந்த இவர், அடிக்கடி போய் அவர்களை தொல்லை செய்வது, கண்ணம்மாவுக்கு சப்போர்ட்டாக பாரதியிடம் சண்டைக்கு போவது என தற்போது சீரியல் கதை பயணித்து கொண்டிருக்கிறது. பலருக்கும் இது பாரதி கண்ணம்மா சீரியல் தானா என்ற குழப்பமும் உள்ளது. ஆனாலும் நிஷாவின் நகைச்சுவைக்காக சீரியல் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா தொடரை பார்க்கவும் தொடங்கியுள்ளனர். சொல்ல போனால் இப்போது பாரதி கண்ணம்மா சீரியலே நிஷாவை நம்பி இருப்பது போல ஒளிப்பரப்பாகி வருகிறது. பார்ப்தற்கு ரகளையாக இருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இருந்த புதுமையான கதையோட்டத்தை இந்த பாணி குறைக்கிறது என்றே கூறலாம்..

' isDesktop="true" id="642055" youtubeid="JJPNQhpHADg" category="tamil-nadu">

கூடிய விரைவில் இயக்குனர் சீரியலில் ஒரு மாற்றத்தை புகுத்தி, பழைய பாணியில் வேகமான திரைக்கதை இயக்கினால் முன்பு போலவே சீரியலை பார்ப்பவர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதே உண்மை.

பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

இன்றைய சீரியலின் புரமோவிலும் அறந்தாங்கி நிஷா தான் இடம் பெற்றுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: