KANNADA ASSOCIATION TORN THE SASIKALA WELCOMES BANNER SKD
பெங்களூருவில் சசிகலாவை வரவேற்று தமிழில் வைக்கப்பட்ட பேனரை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் - ரிசார்ட் அருகே பரபரப்பு
சசிகலா பேனர் கிழிப்பு
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சசிகலா தங்கியிருக்கும் விடுதி முன்பு சசிகலாவை வரவேற்கும் விதமாக தமிழில் வைக்கப்பட்ட பேனர்களை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 31-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி வருகிறார். ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்களின் அறிவுரை இருப்பதால் தற்போதைக்கு அவர் யாரையும் பார்க்காமல் தனிமையில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து அவரைக் காண்பதற்காக அவரது ஆதரவாளர்களும் சொகுசு விடுதி முன்பு கூடி வருகிறார்கள்.
நாளை காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்துக்கு கிளம்பும் சசிகலாவிற்கு, சிறப்பான வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக பெங்களூருவில் சசிகலா தங்கியிருக்கும் விடுதி முன்பு சசிகலாவை வரவேற்கும் வகையில் தமிழில் பேனர் வைத்திருந்தனர்.
அதனையடுத்து, அங்குவந்த கன்னட அமைப்பினர், சசிகலாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கர்நாடக போலீசார் பேனர்களை அகற்றியது குறிப்பிடத்தக்கது.