ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூத்துக்குடியில் வெற்றிவாகை சூடிய கனிமொழி!

தூத்துக்குடியில் வெற்றிவாகை சூடிய கனிமொழி!

எம்.பி., கனிமொழி

எம்.பி., கனிமொழி

தமிழகத்தில் பாஜக மீதான எதிர்ப்பலை இத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டது.

  • 1 minute read
  • Last Updated :

தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக திமுக சார்பில் கனிமொழியும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜனும் போட்டியிட்டார்கள்.

ஆளுமை மிகுந்த இரு பெண் அரசியல் தலைவர்கள் போட்டியிட தூத்துக்குடி தொகுதி தேர்தல் காலத்தில் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, 13 பேர் பலியான துயரம், தாது மணல் கொள்ளை, தாமிரபரணி பிரச்னை, உப்பளத் தொழிலாளர் பிரச்னை, மீனவர் பிரச்னை எனப் பல சிக்கல்கள் நிறைந்திருந்த தொகுதியில் வேட்பாளர்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

ஆனால், தமிழகத்தில் பாஜக மீதான எதிர்ப்பலை இத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இம்முறை தூத்துக்குடியில் திமுக வேட்பாளரான கனிமொழி வெற்றி வாய்ப்பைப் பெற்றார்.

3.47 லட்சம் வாக்குகளில் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.

First published:

Tags: Kanimozhi, Lok Sabha Election 2019, Thoothukkudi S22p36