Home /News /tamil-nadu /

சமூகநீதிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் தளபதி அண்ணன் - மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழியின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு

சமூகநீதிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் தளபதி அண்ணன் - மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழியின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு

கனிமொழி-மு.க.ஸ்டாலின்

கனிமொழி-மு.க.ஸ்டாலின்

Kanimozhi Wishes MK Stalin : முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அண்ணணுக்கு சகோதரி கனிமொழி டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

    தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 70 புகைப்படங்களுடன் கூடிய பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் என்பதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    கோவையில் லங்கா கார்னர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஸ்டாலினின் சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    Must Read : மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பொதுக் குழு உறுப்பினரில் இருந்து முதல்வர் வரை.. கடந்து வந்த அரசியல் பாதை

    திமுக கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மசூது சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களில், "நெருப்புடா... தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம்..." என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி திமுகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

     



    இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி, டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “பெரியார்- அண்ணா - கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூகநீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி - அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு அதில் ஒரு விடியோவையும் இணைத்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Kanimozhi, MK Stalin

    அடுத்த செய்தி