தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் நேற்று இரவு தி.மு.க - அ.தி.மு.கவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.கவினர் தாக்கியதில் மூன்று தி.மு.க இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரூரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி மருத்துவமனையில் உள்ள மூன்று பேரின் நலம் விசாரித்தார்.
அதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அ.தி.மு.கவினரும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதை தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதை கேட்ட தி.மு.கவினரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி, இரவு 11மணிக்கு மேல், தன்னிச்சையாக தனது கைக்கூலிகளுடன், வாக்கு சேகரிக்கிறேன் எனும் பெயரில், தூங்கும் மக்களை தொந்திரவு செய்யும் விதத்தில் நடந்துக்கொண்ட அதிமுக வேட்பாளரை தடுத்து நிறுத்தி நியாயம் கேட்டதற்காக, ஆளுங்கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டு (1/2) pic.twitter.com/WrPdfklfmP
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் என்றால், ஒவ்வொரு அமைச்சர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். புகார் அளித்தாலும் நடவடிக்கை இருக்குமா? என தெரியவில்லை என்றார்.