கரும்பூஞ்சை பாதிப்புக்கான காரணத்தை மத்திய அரசு கண்டறிய வேண்டும் - எம்.பி கனிமொழி வலியுறுத்தல்

கனிமொழி

கரும்பூஞ்சைப் பாதிப்புக்கான காரணத்தை மத்திய அரசு கண்டறியவேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் லாயல்மில் நிர்வாகம் சார்பில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்ககைளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் கோவில்பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கோவிட் மையத்தில் சிகிச்சை பெற்று வருபர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘கோவில்பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கோவிட் மையத்தில் சிகிச்சை பெற்று வருபர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கிப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி மிகப்பெரிய அளவில் உதவி செயக்கூடியது. நுரையீரலை பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்பதால் யோகா பயற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கரும்பூஞ்சை மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் நோயாளிகளை பாதிக்க கூடியதாக மாறியுள்ளது. கரும்பூஞ்சை நோய் தாக்கத்திற்கான காரணங்களை கண்டறிந்து மத்தியரசு அதனை தடுப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் போதிய அளவில் மருந்த கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பு தமிழகத்தில் பொது விநியோக திட்டம் மிக திருப்திகரமாக இருந்தது.

கனிமொழி, கடம்பூர் ராஜூ


தமிழகத்தினைப் பார்த்து பாடம் மற்றவர்கள் கற்று கொள்ள வேண்டும். தவிர மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள்கள் எல்லாம், தொடர்ந்து கிடைப்பதற்கான பொது விநியோகத்திட்டம் எப்பொழுதும் சிறப்பாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பு ஊசி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். நிச்சயமாக அதற்கு மத்தியரசு வழிவகை செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகமாக தடுப்பு ஊசி போட முன்வந்துள்ளனர். எனவே தடுப்பு ஊசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்க கூடாது. அதற்கு மத்தியரசு ஆவணம் செய்ய வேண்டும், தமிழகத்தில் முதன் முறையாக எழுத்தாளர் கி.ராவின் மறைவுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அவருக்கு சிலை அமைப்பதற்காக இடத்தினை பார்வையிட்டுள்ளோம், எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அரசு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர்  சிலை அமைக்கும் இடம் தேர்வு செய்யப்படும்’ என்றார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: