ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“தமிழர்களின் உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடி கொடுப்பார்கள்” - கனிமொழி எம்.பி

“தமிழர்களின் உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடி கொடுப்பார்கள்” - கனிமொழி எம்.பி

கனிமொழி

கனிமொழி

எப்போதும் மென்மையாகவும் மரியாதையாகவும் பேசும் முதலமைச்சருக்கே கோவம் அளவிற்கு கவர்னர் செயல் உள்ளது - கனிமொழி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு வாழ்க என்ற கோலங்களின் மூலம் தமிழர்கள் மென்மையான முறையில் ஆளுநர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என பேசியிருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதோடு தமிழ்நாடு அரசின் சின்னத்திற்கு பதிலாக இந்திய அரசின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு கொண்டாடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் பலரும் தமிழ்நாடு என கோலமிட்டு பொங்கல் கொண்டாடினர்.

சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “தமிழ் மக்களின் உணர்வு மிகவும் ஆழமானது. அது மற்ற உணர்வுகளை போல் பூசிக்கொண்டு தமிழ் மக்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அந்த உணர்வை சீண்டி பார்த்தால் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதன் ஒரு பகுதியாகதான் இன்று மென்மையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பேரறிஞர் அண்ணா வைத்த பெயர் தமிழ்நாடு. எப்போதும் மென்மையாகவும் மரியாதையாகவும் பேசும் முதலமைச்சருக்கே கோபம் அளவிற்கு கவர்னர் செயல் உள்ளது” என தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து சில மாநிலங்களில் ஆளுநர்களை முதலமைச்சர்கள் வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகிவிட்டது என தமிழிசை கூறியதற்கு பதிலளித்த அவர், ஆளுநர்களை அவர்கள் வம்பிழுக்கவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள்தான் ஆளும் கட்சியை வம்புக்கு இழுப்பதாக தெரிவித்தார்.

First published:

Tags: Governor, Kanimozhi, Pongal, Tamilnadu