• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல் செய்கிறார் அண்ணாமலை - கனிமொழி

மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல் செய்கிறார் அண்ணாமலை - கனிமொழி

கனிமொழி

கனிமொழி

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கனிமொழி கூறினார்.

  • Share this:
    சென்னை தி.நகரில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

    சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

    கொடியசைத்து உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்து, இந்த அறக்கட்டளையின் சார்பில் 10000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, மழை நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசினார்.

    கனிமொழி கூறுகையில், சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்ட காலம் போராட்டமாகவே உள்ளது இதற்கான நிரந்தர முடிவுகள் எடுக்கப்படும். நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    Must Read : காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே நாளை கரையைக் கடக்கும் - பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

    முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி கேள்வி எழுப்பிய போது, மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: