Home /News /tamil-nadu /

அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள்? - கனிமொழி ஆவேசம்

அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள்? - கனிமொழி ஆவேசம்

கனிமொழி - நிர்மலா சீதாராமன்

கனிமொழி - நிர்மலா சீதாராமன்

தொழில் வளர்ச்சிக்காக இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் விவசாயத்திற்கும் தனி இடங்கள் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கி அந்த இடங்களில் உணவு தரக் கூடிய நிலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என கனிமொழி தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
தமிழை வளர்க்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், தமிழை வளர்க்க மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறியிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “மத்திய அரசாங்கம் தமிழ் வளர்ப்பதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்?

தற்போது கூட பட்ஜெட் முடிந்தது, அதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, சமஸ்கிருதம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளை வளர்ப்பதற்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, என்பதை தெளிவாக தெரிவிக்கட்டும்.

எந்த ஒரு திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் கூட பெயர் வைக்காத மத்திய அரசு, எந்த திட்டத்திற்கும் தமிழ் மொழியாக்கம் இல்லாத எல்லாத் திட்டங்களையும் இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள் இதிலிருந்து தமிழ் எந்த அளவிற்கு வளர்ப்பார்கள் என தெளிவாக தெரிகிறது.

பெட்ரோலை உணவாக உண்ண முடியாது. அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதனால் தொழில் வளர்ச்சிக்காக இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் விவசாயத்திற்கும் தனி இடங்கள் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கி அந்த இடங்களில் உணவு தரக் கூடிய நிலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது.

எட்டுவழிச்சாலை விவகாரத்தில் என்ன பெயர் மாற்றினாலும் மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எதையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையுமே திமுக ஏற்றுக்கொள்ளாது என தலைவர் ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார்” என கனிமொழி தெரிவித்தார்.

Also Watch:  சினிமாவை விஞ்சிய சிறுமி கடத்தல்!

Published by:Anand Kumar
First published:

Tags: BJP, DMK, Kanimozhi, Nirmala Sitharaman

அடுத்த செய்தி