தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? மக்களவையில் கொதித்த கனிமொழி

அப்போது, மக்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்த பேரணியில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? மக்களவையில் கொதித்த கனிமொழி
கனிமொழி
  • News18
  • Last Updated: June 26, 2019, 6:16 PM IST
  • Share this:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த பிறகும், சி.பி.ஐயின் விசாரணை அறிக்கையில் ஒரு காவலர் பெயரும் இடம் பெறவில்லை என்று தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, மக்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்த பேரணியில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அந்தச் சம்பவத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.கவின் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஓராண்டுகள் கடந்துவிட்டது.


இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றிய மதுரை உயர் நீதிமன்றம் வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு பத்து மாதங்கள் கடந்து விட்டது. இன்னமும், சி.பி.ஐயின் முதல் தகவல் அறிக்கையில் ஒரு காவலர் பெயரைக் கூட குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில், தூத்துக்குடி மக்கள் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

Also see:

First published: June 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்